நாட்டுக்கோழி கறிக்குழம்பு
தேவையான பொருட்கள்:
- வெங்காயம் - 100கிராம்
- பூண்டு - 50கிராம்
- சிறிய தக்காளி - 1
- இஞ்சி - சிறிய துண்டு
- பட்டை
- கிராம்பு
- சோம்பு
- கசகசா
- கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இழை
- காய்ந்த மிளகாய் - 1
- மஞ்சள் தூள்
- சிக்கன் பொடி
- மல்லித் தூள் - 100 கிராம்
- நாட்டுக்கோழி - 1/2 கிலோ
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி முதலில் வெங்காயம்,பூண்டு,காய்ந்த மிளகாய் அகியவற்றை வதக்கிக்கொள்ளவேண்டும். வதக்கிய பின் அதனுடன் பட்டை,கிராம்ப,சோம்பு,கசகசா,கருவேப்பில்லை இழை ஆகியவற்றை வதக்க வேண்டும்.கடைசியாக மல்லித்தூள் மற்றும் சிக்கன் பொடியை வதக்கிய பொருளுடன் சேர்த்து வதக்க வேண்டும்.
வதக்கிய பொருட்களை ஆற வைத்து மிக்சியில் மசாலாவாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
இப்பொழுது ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை போட்டுக்
கொள்ளவேண்டும்.அதனுடன் நாட்டுக்கோழியை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.அதனுடன் மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவேண்டும்.சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும்.
அரைத்து வைத்த மசாலாவை வேகவைத்த கறியில் ஊற்ற வேண்டும்.ஊற்றிய பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்துக்கொள்ளவேண்டும்.
பின் நான்கு அல்லது ஐந்து விசில் விட வேண்டும்.கடைசியாக கொத்தமல்லி இலையை போடவேண்டும்.
அவ்வளவுதான் இனி சுவையான நாட்டுக்கோழி கறிக்குழம்பு தயார்.
இந்த கறிக்குழம்பை இட்லீ,தோசை,சாப்பாடு மற்றும் பூரி ஆகியவற்றில் சேர்த்தும் சாப்பிடலாம்.
Comments
Post a Comment